பைடனின் நிர்வாகத்தில் இலங்கை விடயம் கையாளப்படுமா? வெளிவந்தது அறிவிப்பு
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றிருக்கும் பைடன் நிர்வாகம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணையுமா என்பது விரைவில் தெரியவரும் எனினும், இலங்கையில் உண்மையான அமைதி ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசிலும் தற்போதைய அரசிலும் சிறிதளவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஆதரவை இலங்கையை கொடுமைப்படுத்தும் முயற்சியாக பார்க்கக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.