சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அமெரிக்க பிரஜை!
அமெரிக்க பிரஜையொருவர் உள்ளிட்ட இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்காலை மற்றும் வாரியப்பொல ஆகிய பிரதேசங்களில் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தங்காலை,நாகுலுகமுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜையொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 54 வயதுடைய அமெரிக்க பிரஜையொருவராவார். தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
வாரியபொல, நாவின்ன சிறுவர் இல்லத்திற்கு அருகில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொலகாவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அலுத்கம, பமுணாகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலத்தில் முகம் மற்றும் பாதங்களில் சில காயங்கள் காணப்படுகின்ற நிலையில், வாரியப்பொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.