கட்டுநாயக்காவில் இரகசியமாக தரையிறங்கிய அமெரிக்க குழு - கம்மன்பில எடுத்த நடவடிக்கை
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, கடந்த மாதம் இலங்கை வந்த அமெரிக்க தூதுக்குழுவினர் தொடர்பில் தகவல் கோரி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தகவல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த தகவலை எம்.பி.கோரியுள்ளார்.
C 17 - இரண்டு Globemaster விமானங்களில் இலங்கை வந்த அமெரிக்க தூதுக்குழுவின் பிரதிநிதிகளின் பெயர்கள் என்ன?வந்தவர்களில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் இருந்தாரா? குடிவரவு அதிகாரிகள் வந்தவர்களின் கடவுச்சீட்டை சரிபார்த்தார்களா?, குடிவரவு அதிகாரிகள் கடவுச்சீட்டில் முத்திரையிட்டார்களா?, அவர்களின் பொதிகள் சுங்கச்சாவடி வழியாக சென்றதா?, வழக்கமான பயணிகள் முனையம் வழியாக நாட்டிற்குள் நுழைந்தார்களா? சுங்க அதிகாரிகளால் அந்த குழுவை வெளிப்படுத்த வேண்டாம் என்று யாராவது அறிவுறுத்தினார்களா, அப்படியானால், அந்த அறிவுறுத்தலை வழங்கியது யார்? போன்ற தகவல்களை வழங்குமாறு கம்மன்பில கோரியுள்ளார்.
