அமெரிக்க விசுவாசமா அணிசேரா கொள்கை..! ரணிலை போட்டு தாக்கும் ஹக்கீம்
இலங்கையின் அணிசேரா கொள்கை என்பது அமெரிக்க விசுவாசமா என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு
இலங்கை அணிசேரா நாட்டுக்கொள்கையை பின்பற்றும் நாடாக இருந்தால் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு அதிபர் ரணிலால் எவ்வாறு சிறிலங்கா கடற்படை கப்பலை அங்கு அனுப்ப முடியும்.
உகண்டா நாட்டுக்கு சபாநாயகருடன் நாங்கள் கடந்த வாரம் சென்றிருந்தோம். அதேபோன்று எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இடம்பெற உள்ளது .அந்த மாநாட்டுக்கு அதிபர் ரணிலும் செல்லவுள்ளார்.
அணிசேரா நாட்டுக்கொள்கையை பின்பற்றும் நாடாக இலங்கை உள்ளது. ஆனால் தற்போது அமெரிக்க விசுவாசமா எமது அணிசேரா கொள்கை
சிறிலங்கா கடற்படையை அனுப்புவதாக இருந்தால்
அமெரிக்காவின், இஸ்ரேலின் தேவைக்கு மேலும் சில நாடுகளுடன் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு சிறிலங்கா கடற்படையை அனுப்புவதாக இருந்தால், அதிபர் எதற்காக அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உகண்டா செல்ல வேண்டும்.
எனவே இலங்கை அணிசேரா கொள்கையை பின்பற்றும் நிலையில் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு அமெரிக்காவின் தேவைக்காக செயற்பட்டு ''ஜோக்கர்''நாடாகிவிடக் கூடாது என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |