அத்துமீறலுக்கு உள்ளான 14 வயது சிறுமி...! ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட அறிக்கை
அம்பாறையில் 14 வயதுச் சிறுமி ஒருவரைத் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இறக்காமக் கிளை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அம்பாறையில் சிறுமி ஒருவரைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் (01-06-2026) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அறிக்கை
இதில் எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவி எனக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்றிதழ் பெற்ற மௌலவி அல்லர் என்றும் அவர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் கல்வி கற்கவில்லை என்றும் ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிலோ அல்லது அதன் இறக்காமக் கிளையிலோ உறுப்பினராக இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |