மாவடிப்பள்ளி உழவு இயந்திர கோர விபத்தை விபரித்த உயிர் தப்பிய மாணவன்
காரைத்தீவு (Karaitivu) மாவடிப்பள்ளி (Mavadipalli) பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் எட்டு மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
இந்தநிலையில், ஐந்து மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
உயிர் பிழைத்த மாணவர்
இந்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்ரசா பாடாசலையிலிருந்து காரைத்தீவுக்கு பேருந்தில் வந்தோம்.அப்போது மாலை 3.30 மணி இருக்கும் அங்கு இருந்தவர்கள் உழவு இயந்திரத்தை கொண்டு ஆட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்கள்.
நாங்கள் 11 பேர் உழவு இயந்திரத்தில் ஏறினோம் சிறிது தூரம் சென்றதும், வெள்ளப்பெருக்கு காரணமாக டிராக்டரின் முன் சக்கரம் ஒரு பக்கமாக சரிந்தது.
உழவு இயந்திரம்
உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீருக்குள் வீழ்ந்தோம் அப்போது உழவு இயந்திரம் முழுவதுமாக மூழ்கியது.
அந்நேரத்தில் ஒரு அண்ணன் வந்து இரண்டு பேரை இழுத்துக் காப்பாற்றானார் நான் அங்கிருந்து விரைந்து சென்று அருகில் இருந்த மரத்தைப் பிடித்தேன் பின்னர் மரத்தில் ஏறினேன்.
ஒரு படகு அருகில் வந்தது நான் கத்தினேன், கேட்கவில்லை மீண்டும் அந்த படகு சென்றுவந்ததை அவதானித்தேன் அப்போது கத்தினேன், அவர்கள் வந்தார்கள்.
நான் படகில் ஏற்றப்பட்டேன் நடந்ததைச் சொன்னதும் அவர்கள் போய்ப் பார்த்தார்கள் அப்போதும் ஒருவர் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது பின்னர் என்னை கரைக்கு அழைத்து வந்தார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |