மகிந்தவின் மைத்துனருக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

SriLankan Airlines Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Shiranthi Rajapaksa
By Sathangani Jul 01, 2025 10:35 AM GMT
Report

புதிய இணைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தொடர்ந்தும் விளக்கமறியல்

மேலும் அன்றைய தினத்திற்கு முன்னர் விசாரணைகளை முடித்து நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மகிந்தவின் மைத்துனருக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Ex Sri Lankan Airlines Chairman Nishantha Arrested

நிஷாந்த விக்ரமசிங்க, விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மனைவி சிரந்தி ராஜபக்சவின் (Shiranthi Rajapaksa) சகோதரரும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க (Nishantha Wickramasinghe) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் (CIABOC) அவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் புலிகளின் எழுச்சி!! அரசை எச்சரிக்கும் பொன்சேகா

வடக்கு, கிழக்கில் புலிகளின் எழுச்சி!! அரசை எச்சரிக்கும் பொன்சேகா

நீதிமன்றத்தில் முற்படுத்தல்

கைது செய்யப்பட்ட நிஷாந்த விக்ரமசிங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மகிந்தவின் மைத்துனருக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Ex Sri Lankan Airlines Chairman Nishantha Arrested

இதேவேளை ஜனவரி 22, 2014 அன்று மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்காவிற்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த UL319 விமானத்தின் இலக்கை மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4,512 அமெரிக்க டொலர் நிதி இழப்பை ஏற்படுத்தியிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன் ஜனவரி 26, 2014 அன்று மாலைதீவிலிருந்து வந்து UL563 விமானத்தில் பிரான்சுக்குச் செல்லவிருந்த 75 பயணிகளை இறக்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 19,160 அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 கோடி ரூபா ஊழல்! அம்பலமான உண்மை

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 கோடி ரூபா ஊழல்! அம்பலமான உண்மை

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026