அம்பாறையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் பொலிஸார் குழப்பம்! பதாதைகளும் பறிப்பு

Police Protest Eastern Province Amparai
By Vasanth Jan 06, 2021 01:53 AM GMT
Report

நாட்டில் கொரோனாத் தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய கோரிய மகஜர் கையளிக்கும் நிகழ்வில் பொலிஸார் குழப்பம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியை கொரோனாத் தொற்றை காரணமாக காட்டி பிரதேச செயலக வளாகத்திற்கு வருகை தந்த பொலிஸ் மற்றும் புலானாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அரசியல் பிரமுகர்களும் , பொது அமைப்பை சார்ந்தவர்களும் கருத்து தெரிவிப்பதை பதிவுசெய்ய வேண்டாம் என கூறியதோடு பதாகைகளை கைப்பற்றி சென்றனர்.

இதன் பின்னர் ஊடக சந்திப்பில் கருத்து கூறிய இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணைச்செயலாளர் அ. நிதான்சன், சிறைகளில் தற்போது கொரோனாத் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் வேதனையடைகின்றனர்.

அது மாத்திரமல்லாது தமிழ் அரசியல் கைதிகள் பலர் வைரஸ் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்னாயக்க போன்றோரை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையறிந்து உடனே விடுதலை செய்ய முடியாது என கேள்வியெழுப்பினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு எங்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தினர் என குறிப்பிட்டார். திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.டபிள்யூ .கமலராஜன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் மகஜரினை கையளித்திருந்தோம்.

அம்பாறை மாவட்ட மக்களின் ஒருமித்த குரலாக பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் தொற்று நோய்க்கு ஆளாகாத வண்ணம் புதிய ஆண்டில் நல்லதொரு செய்தியாக கைதிகளை விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டார். இதன் போது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி குறிப்பிடுகையில், இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் பொரோனா தொற்றின் காரணமாக வருத்திக் கொண்டிருப்பது மன வேதனையை தருகின்றது. இவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

உலக நாடுகள் அரசியல் கைதிகள் விடையத்தில் கவனம் செலுத்தி விடுதலை செய்ய கோருகின்றோம். ஐக்கிய நாடுகளின் உலகசாசனத்தின் படி எந்த ஒரு அரசியல் கைதிகளையும் குற்றமின்றி விசாரணையின்றி தடுத்து வைப்பது குற்றமாகும். இது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. இச் சாசனத்தில் இலங்கை அரசும் கைச்சாத்துட்டுள்ளது. விசாரணை இன்றி தடுத்து வைப்பது குற்றம் என வடக்கு கிழக்கு தமிழ் உறவுகள் சார்பாக வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026