தற்போதைய அரசாங்கத்தின் கடிவாளம் பசில் ராஜபக்ஷ கையிலே!

SRILANKA kalmunai amparai
By Vasanth Mar 23, 2021 08:15 AM GMT
Report

ங்கள் நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டிலேயே இருக்கின்ற வளங்கள் போதுமானது என்பது தான் எங்கள் கருத்து. நாங்கள் சர்வதேச தலையீட்டை விரும்பவில்லை. முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எமது அரசாங்கம் இனவாதம் இல்லாத ஒரு அரசாங்கம் . நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணி உரிமம் வழங்காது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் வழங்கியது என்பது ஒரு இனவாத செயல் ஆகும்.

இதை வன்மையாக கண்டிக்கின்றோம். இதில் அரசாங்கம் தலையிட்டு நிச்சயமாக நீதியை பெற்றுக்கொடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

எமது நாட்டு சூழலை பார்க்கின்ற பொழுது ஒரு நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்து அதன் வெற்றிக்கு பின்னால் இருக்கின்ற கிங்மேக்கரான பசில் ராஜபக்ஷ நேரடியாக ஆட்சி அதிகாரங்களுக்கு வர வேண்டும் என நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

அதே போன்று நாங்கள் மட்டுமல்ல அதாவது ராஜபக்ச குடும்பத்தை எதிர்த்து நிற்கின்ற கட்சிகள் கூட பசில் ராஜபக்ஷ வரவேண்டும் என உள்ளார்ந்தமாக இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம். ஏனெனில் அரசாங்கத்தின் கடிவாளம் இன்றைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ச கையில் இருப்பதாக தான் எங்களுக்கு தெரிகின்றது.

அந்த வகையில் அவர் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு செல்லக் கூடியவர் என்பதனை வரலாற்றில் நாம் கண்டிக்கின்றோம்.

கடந்த ஆட்சிக் காலத்திலே அவர் ஒரு பிரதானியாக இருக்கின்ற பொழுது நாட்டுடைய அபிவிருத்திகளை கொண்டு சென்ற பொழுது அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தாலும் கூட அவர் வடக்கு கிழக்கை ஒதுக்கிவிட்டு ஏனைய பகுதியை பார்க்கவில்லை.

மாறாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அவர் தாராளமாக உதவி செய்ததை நாங்கள் சொல்லவில்லை அந்த அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் கட்சி தலைவர்களே பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள்.

அப்படிப்பட்ட பசில் ராஜபக்ச அதிகாரத்திற்கு வர வேண்டும். அந்த அதிகாரத்தின் ஊடாக நாட்டை மிகச் சிறப்பான வழியில் அவர் கொண்டு செல்வார் என நாங்கள் நம்புகின்றோம். அதாவது பசில் ராஜபக்ச வருவது என்பது சிலருடைய கற்பனையில் இருப்பது போன்று ராஜபக்ஷ குடும்பத்துக்கு உள்ளே இருக்கின்ற போட்டியாக கருத முடியாது.

ஏனெனில் நாங்கள் ராஜபக்ச குடும்பத்தோடு அரசியல் செய்து கொண்டு வருகின்றோம்.

அண்மையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியது போன்று எங்கள் குடும்பம் என்பது யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாத குடும்பம் என்று சொன்னார். அது உண்மையான கருத்து ஆகும்.

நிச்சயமாக சகோதரர்கள் ஒன்றுபட்டால் நாட்டை ஒரு நேரான சீரிய வழிக்கு கொண்டு செல்லலாம் என்று நாங்கள் கருதுகின்றோம். இதனால் தான் பசில் ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வர வேண்டுமென்று நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம்.

எங்கள் நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களது நாட்டிலேயே இருக்கின்ற வளங்கள் போதுமானது என்பதுதான் எங்கள் கருத்து.

நாங்கள் சர்வதேச தலையீட்டை விரும்பவில்லை. ஏனென்றால் சர்வதேசம் தலையிட்ட நாடுகளிலே பிரச்சினைகள் அதிகரித்து வந்தள்ளதை நாம் காண்கின்றோம். உதாரணமாக சூடானில் ஏற்பட்ட பிரச்சினைகளை அந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் தீர்த்திருக்கலாம்.

சர்வதேசம் தலையிட்டதன் காரணமாக அந்நாடு இரண்டாக பிளவுபட்டதை காண முடியும். ஆகவே எங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அ

ந்த வகையில்சர்வதேச நாடுகள் நாடுகளை இரண்டாகப் பிரிக்கின்ற ஒரு சூழ்ச்சிகளை தான் செய்வார்கள்.

எங்கள் நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் முத்தரப்பாக அரசாங்கமும் தமிழ் மக்களும் முஸ்லிம் தரப்புகளும் ஒன்றிணைந்து பேசி பிரச்சினைகளை தீர்ப்பது தான் நாட்டுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது இது எங்களுடைய கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. மேலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உறுதி தெரிவித்திருக்கின்றது.

ஆனால் எப்போது நடக்கும் என்பது எமக்கு தெரியாவிட்டாலும் கூட எங்களுக்கு ஒரு உண்மை தெரியும் ராஜபக்ச ஆட்சியாளர்கள் தேர்தல்களை கண்டு பயந்ததாக வரலாற்றில் நாம் காண முடியாது.

குறிப்பாக வட மாகாணத்தில் தேர்தல் வைத்தால் நிச்சயமாக அரச கட்சி தோல்வியை தழுவும் என தெரிந்தும் கூட மஹிந்த ராஜபக்ஷ அங்கு தேர்தல்களை வைத்து மக்களுடைய ஜனநாயக உரிமையை பெற்று கொடுத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. கடந்த நல்லாட்சி அரசாங்கமானது மூன்று வருடங்களாக மாகாண சபை தேர்தலை நடத்தவே இல்லை.

அந்தளவுக்கு அச்சப்பட்டார்கள். ஆகவே மாகாணசபைத் தேர்தல் நடக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது மாத்திரமல்ல முஸ்லிம் சமூகத்தை ஒரு கறிவேப்பிலையாக தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் ஒன்று வருகின்ற பொழுது முஸ்லிம்களை கழட்டி விடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி