கல்முனை பிரதேச செயலக வாயிலை முற்றுகையிட்ட மக்கள்- பொய்த்துப்போன அதிகாரிகளின் சமரசம்!

protest thero kalmunai amparai peoples
By Kalaimathy Feb 02, 2022 10:21 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை கல்முனை சுபத்திராம விகாரைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுபத்திராம விகாரைக்கு முன்னால் ஒன்று கூடிய மக்கள் அங்கிருந்து பேரணியாக கல்முனை பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர். இதனையடுத்து கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவு, நகர அபிவிருத்தி அதிகாரசபை அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் பிரதான கதவை மூடி, வழிமறித்து தமது சுகாதார பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரி  அமர்ந்திருந்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் "கழிவு நீரை வைத்து அரசியல் செய்யாதீர்", "மக்களின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்", "முறையான கழிவகற்றல் செய்யப்படவேண்டும்", "மாநகர சபை மௌனம் காப்பது ஏன்?" போன்ற சுலோகங்களை ஏந்தி  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் பொதுமக்கள் அங்கிருந்து செல்லவில்லை.

மாநகரசபை முதல்வர், சுகாதார தரப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று பொது மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்சாத் காரியப்பர், பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை காவல் நிலைய பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர், உட்பட கல்முனை தெற்கு மற்றும் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சுமுகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த கழிவுநீரை உடனடியாக கல்முனை மாநகர சபையின் உதவியைக் கொண்டு அப்புறப்படுத்துவது எனவும் நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடி தீர்வு பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதேச செயலக வளாகத்துக்குள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதுடன்  வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்பட்டது.

அதனை சீரமைக்கும் பணியை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தத்துடன் அங்கு தற்காலிய கொட்டிலமைத்து தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை தரித்திருக்க முயறசித்தவர்களை தடுத்து நிறுத்தி தொடர்ந்தும் சுமூகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன், கல்முனை ஸ்ரீ சுபத்திரா விகாராதிபதி ரன்முதுகல தேரர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் இந்த பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன்மூலம் இனக்கலவரம் மற்றும் வீணான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாக பலரும் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டினர். இவர்களிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்சாத் காரியப்பர் இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் என்னால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு போன்று நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும் வரை பொதுமக்களின் சுகாதார பிரச்சினைக்கு  முடியுமான சகல உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். பிரதேச செயலாளரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தும் ஆர்ப்பாட்டகாரர்கள் தொடர்ந்தும் போராட்டை முன்னெடுத்து வருகின்றனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026