கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம்- சமல் ராஜபக்ஸ வியாழேந்திரன் சந்திப்பு!
kalmunai
amparai
viyalenthiran
samala rajabhaksh
By Kalaimathy
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் சமல் ராஜபக்ஸவிற்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டிய நியாயத்தை எடுத்து கூறியுள்ளதுடன், தேவையான ஆவணங்களையும் எழுத்து மூலம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் சமர்ப்பித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட அமைச்சர். இது குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்