சுமனரத்ன தேரரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!
அம்பாறையில், விகாராதிபதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு இன்று அதிகாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு சிறி மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமனரத்ன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை இலக்கு வைத்தே இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர் தப்பிய தேரர்

எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் தேரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.