தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி)

Tamils Batticaloa Shanakiyan Rasamanickam Ampitiye Sumanarathana Thero
By Shadhu Shanker Oct 25, 2023 01:12 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு இன்று(25) மாலை சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை கடும் தொனியில்  எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததுடன், தமது தாயாரின் சமாதி குறித்த பகுதியில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி) | Ampitiya Sumanarathana Thero Threatening Comments

யாழ் - கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கு காணி உரிமைப் பத்திரம் கையளிப்பு (படங்கள்)

யாழ் - கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கு காணி உரிமைப் பத்திரம் கையளிப்பு (படங்கள்)

அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம்

குறித்த பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில், அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகர சபை ஆணையாளர் அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் நேற்று(24) தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று குறித்த இடத்துக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.


தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி) | Ampitiya Sumanarathana Thero Threatening Comments

தாயின் சமாதி

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர், “ மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மயானம் கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவே இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல. நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை.

கனரக இயந்திரங்களால் சுத்தப்படுத்தவில்லை. எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. அதனை தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மயானங்கள் உள்ளன.

தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி) | Ampitiya Sumanarathana Thero Threatening Comments

 இனவாதம்

ஏன் அவற்றை எவரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மாத்திரம் சுத்தம் செய்கிறீர்கள்? சாணக்கியன் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.

இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் சிறிலங்கா அதிபர், காவல்துறையினர் உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளிடம் கோருகிறேன். இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் வெட்டுவார்கள்.

இதனை தொடர்ந்து, காவல் நிலையத்துக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமது தாயின் சமாதியை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

இங்கிலாந்தில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட ஜீவன் தொண்டமான்

இங்கிலாந்தில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட ஜீவன் தொண்டமான்

தற்போதைய நிலை

ஏன் எனது தாயின் சமாதியை அழிக்கிறீர்கள்? இந்த நடவடிக்கையை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும்? முப்படையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு எனது தாயின் உடலை தகனம் செய்தார்கள்.

அந்த தாயின் சமாதியை தற்போது ஏன் கனரக இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்கிறீர்கள்? நான் இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடின் தற்போதைய நிலை என்ன? இது தொடர்பில் மேற்கொள்ளப்பட் சட்ட நடவடிக்கைகள் என்ன?“ என்ற கருத்துக்களை தெரிவித்ததார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை: நாமல் ராஜபக்ச

ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை: நாமல் ராஜபக்ச

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி