இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
பொலன்னறுவை - மாதுரு ஓயா பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவச் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து நேற்று (17.04.2026) இடம்பெற்றுள்ளதாக அரலகன்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இவ்வாறு உயிரிழந்தவர் மாதிவெல - ஜனககம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை
இந்நிலையில் இராணுவ பயிற்சிக் கல்லூரியிலுள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரலகன்வில காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |