மட்டக்களப்பில் தாயை கொலை செய்த மகன் கைது
மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்த பணம் தராத காரணத்தினால் தாயை கொலை செய்த மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று ( 17.04.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 19 வயதுடைய மகன் தனது தாயாரிடம் மதுபானம் அருந்துவதற்கு ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ள நிலையில் தாயார் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
42 வயதுடையவர்
இதன்போது, கோபமடைந்த மகன் தாயாரை பிடித்து தள்ளியதையடுத்து, அவர் தரையில் தலையடிக்க வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பழைய சந்தை வீதி, சித்தாண்டி 4ம் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |