ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
வழக்கில் முன்னிலையாகத் தவறியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு (Hirunika Premachandra) எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (10) காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்திருந்தார்.
பின்னர் மனுவொன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகிய ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்தார். அதன்படி, அந்த பிடியாணையை திரும்பப் பெற நீதிபதி உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் காவல்துறை பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியினால் இன்றைய தினம் (10.02.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகத காரணத்தினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உதரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |