சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
Grade 05 Scholarship examination
Western Province
By Sumithiran
மேல்மாகாணத்தில் 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் (31.5 சதவீதம்) உயர்தரம் படிக்கத் தகுதி பெறவில்லை என்று கணக்காய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலின்படி, அந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு 51423 மாணவர்கள் தோற்றியிருந்தனர், அவர்களில் 16195 பேர் உயர்தரம் கற்கத் தகுதி பெறவில்லை.
பிரதான பாடங்களிலும் சித்தியடையவில்லை
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15 வீதமான மாணவர்கள், அதாவது பரீட்சைக்குத் தோற்றிய 23482 பேரில் 3521 மாணவர்கள் மூன்று பிரதான பாடங்களிலும் சித்தியடையவில்லை.
அதே ஆண்டில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 75,223 மாணவர்களில் 11,792 அல்லது 15.7 வீதமானோர் 80க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி