யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு சென்ற இந்திய பிரஜை கைது
இலங்கைக்கு வந்து விசா இன்றி கடந்த இரண்டு வருட காலமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற இந்திய பிரஜையான தமிழர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தமிழ்நாடு சின்ப்பள்ளிகிராமம் கம்பள்ளி பேஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்பவராவார்.
சுற்றுலா விசாவில் வந்து

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் வந்து யாழ்ப்பாணம் கைலாசபிள்ளையார் கோவிலடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மட்டக்களப்பிற்கு சென்ற இவர் தனது நண்பர் ஒருவருடன் மட்டக்களகப்பு நகர்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடங்களாக அவர் விசா இன்றி தங்கியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.