இலஞ்சம் வாங்கும் போது சிக்கிய அதிகாரி -கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டார்
Sri Lanka Police
Colombo
Bribery Commission Sri Lanka
By Sumithiran
இலங்கை போக்குவரத்து சபையின் ஹிங்குராக்கொட தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியசென்புர டிப்போவில் பேருந்து நடத்துனரிடம் 60,000 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் குறித்த அதிகாரி நேற்று மாதிரிகிரிய விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்து நடத்துனரிடம் இலஞ்சம்

பயணிகளுக்கு டிக்கெட் வழங்காதது தொடர்பாக பேருந்து நடத்துனரிடம் நடத்திய விசாரணையில், அவரை விடுவிப்பதற்காக இலஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி பொலன்னறுவை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.