மேலும் இரண்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன
இலங்கையில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைச்செலவை ஈடு செய்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மற்றும் இரண்டு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதன்படி பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும் என கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்(D.P. Herath) தெரிவித்துள்ளார்.
திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.