இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற ஆந்திர மாநில முன்னாள் எம்.எல்.ஏ விமான நிலையத்தில் கைது
ஆந்திராவில்(andhra) மதுபான கொள்கை குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அம் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் இலங்கைக்கு(sri lanka) தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் சந்திரகிரி பேரவை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் சிறப்பு அறங்காவலர் குழு உறுப்பினருமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி என்பரே கைது செய்யப்பட்டவராவார்.
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சி
இலங்கைக்கு தப்பிச் செல்தற்காக செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தவேளை அங்கு வைத்து ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதான முக்கிய குற்றவாளியான கசிரெட்டி ராஜசேகர ரெட்டியிடமிருந்து சுமார் ரூ.300 கோடி வரை செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்