உயிரீகத்தின் உச்சம் தொட்ட தியாக தாய் அன்னை பூபதி..! (காணொளி)
தமிழர்களின் வரலாறு தியாகத்தினாலும் உரிமைப்போராட்டங்களினாலும் பதிவுசெய்யப்பட்டது . அந்த பதிவுகள் காலத்தை கடந்தும் அடக்குமுறைகளுக்கு அப்பாலும் தமக்கான நிகழ்த்துகைகளை நேர்நிறுத்திக்கொள்ளும் அவ்வாறான ஒரு பதிவாக தனது பெயரையும் தமிழர் வரலாற்றில் பதிவு செய்து தன்னையும் அர்ப்பணித்த தியாகத்தின் அதியுயர் வடிவம்தான் அன்னை பூபதி .
இனமொன்றின் தேசிய விடுதலைக்காகவும் அடுக்குமுறை இராணுவங்களின் அடாவடிகளுக்கெதிராகவும் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 35 வது ஆண்டு நிறை நினைவுதினம் இன்றாகும் .
பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்று எத்தனையோ பேர் வாழ்ந்து கடந்து போன சமகாலத்தில் எல்லோருக்குமாக போராடவும் அநீதிகளுக்கெதிரான நீதியை வென்றெடுக் கவும் தன்னை அர்ப்பனித்த அன்னை பூபதியின் உயிர் தியகம் வர்த்தைகளால் வடிக்கவியலாதது .
அடக்குமுறையின் அகோரப்பிடியிலிருந்து விடுபடத்துடிக்கும் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலும் தியாகத்தீபங்களான இருவரும் காலமுள்ளவரை வாழ்ந்துகொண்டேயிருப்பீர்கள் .
அறப்போர் புரிந்த அன்னையே மறப்போமா உன்னை .. இன்றைய நாளில் நன்றிப்பெருக்கோடு ibc Tamil உங்களை நினைவுகூருகின்றது