அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி!!
people
vaviniya
annaipoopathi
By Vanan
இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவுதினம் இன்று வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அவரது திருவுருவப் படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும், காணாமல் போனவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான ஜனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள். அவரது விருப்பத்தைத் அடைவதற்கு, எங்களுக்கு அமெரிக்காவே தேவை என்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்