இலங்கையில் வெளிநாட்டு நாணயம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படுகின்றதா..!
இலங்கை ஊழியர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த வெளிநாட்டு நாணயம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படும் என்ற வதந்தி முற்றிலும் பொய்யானது என மத்திய வங்கி அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணி பணத்தை ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கலாம் எனவும் அல்லது ரூபாவாக மாற்ற முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சலுகை மாற்றம்
மேலும், வெளிநாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
There are NO taxes on remittances and expatriate Sri Lankans are free to hold such remittances in foreign currency form in their bank accounts - @CBSL https://t.co/Ckwebr1SI7 #LKA #SriLanka
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) December 4, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
