பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
Boris Johnson
project
home builders
By Vanan
பிரித்தானியாவில் புதிததாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்களில் இலத்திரனியல் கார்களுக்கு மின்னேற்றும் கட்டமைப்பை கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிக மாசுபடுத்தலை ஏற்படுத்தும் வாகனங்களில் இருந்து இலத்திரனியல் வாகனங்களுக்கு மாறும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2022 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) கூறியுள்ளார்.
புதிதாக கட்டப்படும் பல்பொருள் அங்காடிகள், பணியிடங்கள் மற்றும் பெரிய அளவில் புதுப்பிக்கப்படும் கட்டிடங்களும் இப்புதிய சட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 2030 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார கார்களுக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்