இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
105,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்துள்ளது.
குறித்த ஏல விற்பனை 10 ஆம் திகதி திகதி நடைபெறவுள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.
பெறுமதியான திறைசேரி உண்டியல்
அத்துடன், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.
மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் (Sri Lanka) உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஜூன் மாதத்தில் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.
குறித்த அதிகரிப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |