தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து வெளியான அறிவிப்பு
Colombo
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Sathangani
2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு (Ministry of Health and Mass Media) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இன்றும் (20) நாளையும் (21) நேர்காணல்கள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் அறிவிப்பு
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான நேர்காணல்களை மேலே குறிப்பிட்ட அதே திகதிகளில் கண்டி தாதியர் கல்லூரியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சால் முன்கூட்டியே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இந்த நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
