அமரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமை சட்ட ரத்து விவகாரம் : ட்ரம்பிற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

By Shalini Balachandran Jan 23, 2025 06:50 PM GMT
Report

அமெரிக்காவில் (United States) நடைமுறையில் இருக்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகத்தால் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

இதன் முக்கிய திட்டமாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் : இந்தியா ஆதரவு

புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் : இந்தியா ஆதரவு

அமெரிக்க குடியுரிமை 

இதையடுத்து, குறித்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமை சட்ட ரத்து விவகாரம் : ட்ரம்பிற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு | Announcement On The Us Citizenship Act 2025

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால், “இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது, பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது.

ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும், எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிப்ரவரி 19 ஆம் திகதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை அறுவை சிகிச்சை (C-SECTION) மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசின் அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவு : பகிரங்கப்படுத்திய அமைச்சர்

அநுர அரசின் அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவு : பகிரங்கப்படுத்திய அமைச்சர்

"நாங்கள்தான் மிகப்பெரிய முஸ்லிம் கட்சி" : ஹக்கீமுக்கு அமைச்சர் பிமல் சாட்டையடி

"நாங்கள்தான் மிகப்பெரிய முஸ்லிம் கட்சி" : ஹக்கீமுக்கு அமைச்சர் பிமல் சாட்டையடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026