அமெரிக்காவுடனான ஒப்பந்தம் சட்டவிரோதம் -வெளிவந்தது அறிவிப்பு
Sri Lanka
United States of America
By Vasanth
அமெரிக்காவுடன் செய்து கொள்ள உத்தேசிக்கப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டமா அதிபர் ஜனாதிபதியின் செயலாளருக்கு தகவல் அளித்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன இன்று (19) தெரிவித்தார்.
ஏற்கனவே குறித்த ஒப்பந்தத்தை செய்வதற்கு இலங்கையின் பௌத்த பீடங்கள் உட்பட தெற்கின் பலர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி