பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (21.04.2025) முதல் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்விச் செயற்பாடுகள்
மேலும், முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மீண்டும் மே மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறும்.
மேலும், மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டமாக பாடசாலைகள் ஓகஸ்ட் 8ஆம் திகதி திறக்கப்படவுள்ளதோடு, அதன் கல்விச் செயற்பாடுகள் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
