'நல்லூர் திருவிழா' - கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு (படங்கள்)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Vanan
காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
வருடாந்தப் பெருந்திருவிழா
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






