இரண்டு வாரங்களுக்குள் கிழக்கின் மற்றொரு அரசியல் பிரமுகர் கைது?
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிழக்கில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வியாழேந்திரன், பிள்ளையான் வரிசையில் குறிப்பிட்ட அந்தப் பிரமுகரையும் கைது செய்யும்படியான ஆதாரங்கள் மிக மும்முரமாகத் திரட்டப்பட்டு வருவதாகவும், சாட்சிகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
கொழும்பில் இருந்து வந்த சிறப்பு காவல்துறைப் பிரிவு ஒன்றே குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகர் தொடர்பான தகவல்களைத் திரட்டி வருகின்றது.
ஊழல், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளது, அரச காணிகளை அபகரித்து விற்றது போன்ற பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மன்னாரில் பல ஏக்கர் அரச காணியை அபகரித்தது, அப்படியான சில காணிகளை இந்திய வர்த்தகர் ஒருவருக்கு விற்றது, 10 இற்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்களை பினாமி பெயர்களில் உருவாக்கி, அவற்றின் ஊடாக ஊழல்கள் புரிந்தது என்று பல குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து விசாரணைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகர் அமைச்சராகவும, பிரதி அமைச்சராகவும், கிழக்கு மாகாணசபையின் முக்கிய பொறுப்புக்களிலும் பல தடவைகள் இருந்தவர் என்பதுடன், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் உட்பட கிழக்கின் ஆயுதக் குழுக்களைச் செயற்படுத்துவதிலும் சம்பந்தப்பட்டதாகக் குற்றம்சாட்டுப்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
