ஆளும் பொதுஜன பெரமுனவுக்கு வீழ்ந்த மற்றுமொரு அடி
budget
jaela
slpp
defeted
By Jaso
ஆளும் பொதுஜன பெரமுன வசமிருக்கும் ஜா-எல நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நகரசபையின் தலைவரினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தலைவர் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐவர் மாத்திரம் வாக்களித்ததோடு எதிராக 10 பேர் வாக்களித்தனர்.
இதன்படி வரவு செலவுத் திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்களிப்பில் ஐந்து பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி