அமெரிக்க அதிபரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் (காணொளி)
Joe Biden
United States of America
By Sumithiran
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது சற்றும் எதிர்பாராத வகையில் மற்றுமொரு கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிபர் ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில்பைடனும் டெலாவேரில் தங்கள் பிரசாரக் குழுவுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்து புறப்படவிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை
பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அதிபரையும் முதல் பெண்மணியையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
எனினும், அதிபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்றும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இரகசிய சேவை தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை
விபத்து குறித்து வில்மிங்டன் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்