வடக்கு - கிழக்கில் மீண்டுமொரு மோதல் - வெளியாகிய எச்சரிக்கை..!

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Kiruththikan Apr 30, 2023 09:40 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் அதிபர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளர்.

மேலும், இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐ.நா அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வேர்ட் ரீஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் விசேட பிரதிநிதி சனா ரஸ்ஸலா ஆகியோருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மோதல் தடுப்புச் செயற்திட்டம்

வடக்கு - கிழக்கில் மீண்டுமொரு மோதல் - வெளியாகிய எச்சரிக்கை..! | Another Conflict In The North And East Sri Lanka

இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதை இலக்காகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல் தடுப்புச் செயற்திட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான செயற்திட்டங்கள் முன்னர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன? இனிவருங்காலங்களில் அவற்றை எவ்வாறு முன்னெடுக்கலாம்? என்பது குறித்து ஆராயப்பட்டது.

இதன் போது இலங்கையில் உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கும் இருவிதமான மோதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த எம்.ஏ.சுமந்திரன், அவற்றை உரியவாறு கையாள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

முதலாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம்வாய்ந்த பகுதிகள் அழிக்கப்படல் என்பன பற்றி ஐ.நா அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இவை தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்தார்.

எனவே இதுகுறித்து ஐ.நா அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும், மேற்குறிப்பிட்டவாறான முறையற்ற செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தவேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக நாடளாவிய ரீதியில் உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கும் மோதல் குறித்துப் பிரஸ்தாபித்த அவர், 'அரகலய' உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் இன்னமும் அடையப்படாமை இதற்குக் காரணமாக அமையக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அதனூடாகப் பல்வேறு நன்மைகள் அடையப்பட்டுள்ள நிலையில், மக்கள் எதிர்பார்க்கும் உண்மையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அவசியமான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். 

ReeCha
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016