யாழில் கொவிட் தொற்றால் இன்றும் ஒருவர் உயிரிழப்பு - 09 பொலிஸாருக்கும் தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சந்திரமாதா கோவிலடியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளுக்கு
அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, தொற்றுக்குள்ளான அதிகாரிகளுடன்
நெருங்கிய தொடர்பை பேணியவர்களை
கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும்
நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுவருகின்றனர்.