சிறிலங்கா அரசுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் மேலும் ஒரு நெருக்கடி! - ராஜபக்ச குடும்பம் திணறல்
ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவிற்ககு அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் 95,000 மெட்ரிக் டன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு 200 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தது.
எனினும், தற்போது 80 நாட்களுக்குள் தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கையை அந்த நிறுவனம் நிர்பந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதவேளை, வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்காவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ச குடும்பம் கடுமையாக திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        