மியான்மரில் மீண்டும் நில அதிர்வு
மியான்மரில் (Myanmar) இன்று 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (11) காலை 8.02 மணியளவில் பதிவானதாக தெரிவிப்படுகின்றது.
அத்துடன், இந்நில நடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
முன்னர் பதிவான நிலநடுக்கம்
இதேவேளை, கடந்த மார்ச் 28 ஆம் திகதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் அதே நாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,600 ஐ கடந்துள்ளதுடன் 5,017 பேர் காயமடைந்துள்ள நிலையில் 148 பேர் மாயமாகி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
