விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்
Mahinda Amaraweera
Ranil Wickremesinghe
By Sumithiran
கடந்த வருட பெரும் போகத்தின்போது விவசாயிகளுக்கு யூரியா உரம் இலவசமாக வழங்கப்பட்டதைப்போன்று இந்த வருட பெரும் போகத்திலும் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதனை விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
சாதகமாக பதிலளித்த ரணில்

இது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடிய நிலையில் அவர் அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விருப்பத்திற்கு ஏற்ப உரம் கொள்வனவு

அதன்படி, விவசாயிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை தனியார் அல்லது அரச உரக் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்ய முடியும் என மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி