அஜித் ரோகணவிற்கு கிடைத்துள்ள மற்றுமொரு உயர் பதவி
Police
Ajith Rohana
Liquor
SriLanka
Tobacco
By Chanakyan
புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் (Keheliya Rambukwella) இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புகையிலை மற்றும் மதுபானங்கள் சட்டம் எண் 27 od 2006 இன் கீழ் தேசிய ஆணையத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக இவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
