மற்றுமொரு மருத்துவ நிபுணரும் பதவி விலகினார்
medical expert
resinged
covid task force
By Jaso
கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிருவிந்தன வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக் குணரத்ன என்ற வைத்திய நிபுணரே இராஜினாமா செய்தவராவார்.
சுமார் ஒன்றரை வருடகாலமாக குறித்த தொழில்நுட்ப குழுவிலிருந்த போதிலும் கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் தொடர்ந்து குறித்த குழுவில் உறுப்பினராக இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் இந்த குழுவிலிருந்து விசேட மருத்தவ நிபுணரான ஆனந்த விஜய்விக்ரம இராஜினாமா செய்திருந்தார்.
இந்த தொழில்நுட்ப குழுவின் ஊடாக கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என அவரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து.