மற்றுமொரு அமைச்சரும் தனிமைப்படுத்தலில்
covid
self isolation
dullas alagaperuma
By Sumithiran
மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பில் உள்ள தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளார்.
தனது இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளார். இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் அமைச்சு மூடப்பட்டுள்ளது.
மேலும், தாம் நலமாக இருப்பதாகவும், தனது சுய-தனிமைப்படுத்தல் காலம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்சவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி