இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் மற்றுமொரு கண்காணிப்பு விஜயம்(படங்கள்)
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (29) 1990 சுவாசரிய அம்புலன்ஸ் சேவை மையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், 1990 சுவாசரியா அம்புலன்ஸ் சேவையின் சாதனைகளுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்,
இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாட்டை அம்புலன்ஸ் சேவை பெற்றுள்ளது. இலங்கையர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்தியா பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்வதாக கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே இந்திய ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கும் அவர் சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




