நாடாளுமன்றம் செல்லும் மஹிந்தவின் மற்றுமொரு மகன்?
Yoshitha Rajapaksa
SriLanka
Ajith Nivat Cabral
By Chanakyan
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்க்ஷவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் விசேட கோரிக்கைக்கு அமைய, அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பஷில் ராஜபக்க்ஷவின் வருகைக்காக, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொடவிற்கு, வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஒரு சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன