அரசுக்கு எதிரான செயற்பாடு- மைத்திரி தரப்புக்குள் ஏற்பட்டது பிளவு
அமைச்சுப் பதவி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும்,இந்த யோசனைக்கு கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசாங்கம் தவறான பாதையில் செல்வதாக இருந்தால், கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை திருத்திக் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தலுக்கு ஆயத்தம் இல்லாத நிலையில் பழமொழிகளை கூறி அல்லது அரசாங்கத்தின் தவறுகளை மக்கள் முன்னிலையில் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருந்து கட்சி விடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய செயற்குழுவின் கூட்டத்திற்கு பின்னர் பின்னர், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு கட்சியின் தலைவர்,முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு(Maithripala Sirisena) கட்சி உறுப்பினர்கள் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
