பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : சபாநாயகரின் அறிவிப்பு!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) சபையில் அறிவித்துள்ளார்.
இதில் கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனுத்தாக்கல்
கடந்த மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போது, இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் 18 மனுக்கள் மாத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இதற்கு மேலதிகமாக அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 'பயங்கரவாத எதிர்ப்பு' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்களின் பிரதிகள் நாடாளுமன்றத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |