நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
Parliament of Sri Lanka
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Sathangani
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜாபக்ச தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதி செய்யப்பட்டுள்ளது
குறித்த சட்டமூலம் தொடர்பாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டே வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி