ட்ரம்புக்கு எதிராக வெடித்தது போராட்டம் : வீதியில் இறங்கிய மக்கள்
அமெரிக்காவில் (United States) குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டு இராணுவத்திற்கு ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அமெரிக்காவின் - லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகருக்கு 2,000 துருப்புகளை கொண்ட இராணுவ படையணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
    
    வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)
போராட்டக்காரர்கள்
சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடுகடத்தும் முயற்சிகளை எதிர்க்கும் தென்னபிரிக்க பூர்வீகத்தை அதிகமாக கொண்ட போராட்டக்காரர்கள் காவற்துறையினரை தாக்கிவருவதால் போராட்டக்காரகள் சிலர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்கள் அமெரிக்க தேசிய கொடிக்கு தீ வைத்தும் வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை தாககுவதாக தெரிவிகப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்ககைளுக்கு பொறுப்பான சிறப்பு அதிகாரியான ரொம் ஹோமனின் கோரிக்கையை அடுத்தே டொனால்ட் ட்ரம்ப் லொஸ் ஏஞ்சல்சுக்கு தேசிய காவலர் படையணிகளை அனுப்பியுள்ளார்.
லொஸ்ஏஞ்சலசின் பார மவுண்ட் பகுதியின் மக்கள் தொகையில் 80வீதத்து க்கும் அதிகமானோர் தென்னமரிக்க பூர்வீக ஹிஸ்பானிக் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        