அமெரிக்காவிலிருந்து வெளியேறும் புகழ்பெற்ற வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனம்
உலகப் புகழ்ப்பெற்ற ரஷ்யாவின் (Russia) வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமான கெஸ்பர்ஸ்கி (Kaspersky) , அமெரிக்காவில் (USA) தமது செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 20ம் திகதியிலிருந்து அமெரிக்க சந்தையில் தமது செயற்பாடுகளை படிப்படியாக குறைத்துக்கொள்ளுமென கெஸ்பர்ஸ்கி லெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையத்தள பயன்பாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களை அடிப்படையாக கொண்ட குறித்த நிறுவனத்தின் தயாரிப்புகளை தமது நாட்டிற்குள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
அமெரிக்க மக்கள்
அந்தவகையில், செப்டம்பர் 29ம் திகதி இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவிருந்த போதிலும் அதற்கு முன்னரேயே தமது வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுவதற்கு ரஷ்ய சைபர் பாதுகாப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக, தமது தயாரிப்புகளை அமெரிக்க மக்கள் கொள்வனவு செய்வதற்கும் சில தடைகள் தற்போதும் இருப்பதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ரஷ்யாவின் பல்நோக்கு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி லெப் வைரஸ் எதிர்ப்பு தயாரிப்புகள், இணையத்தள பாதுகாப்பு, கடவுச்சொல் முகாமைத்துவம் உள்ளிட்ட கணனி துறை பாதுகாப்பு சார்ந்த மென்பொருள் தயாரிப்புகள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |