அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு: அநுர அளித்த உறுதி
அமெரிக்காவின் (USA) பரஸ்பர வரிவிதிப்பினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கம்பஹாவில் நேற்று (22) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதிதாக ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவரது நிர்வாகம் சுமார் 90 நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பதற்கு தீர்மானித்த நிலையில், இலங்கைக்கு இதனூடாக 44 வீத வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரம்
இந்த அறிவிப்பை தொடர்ந்து எமது நாட்டில் பல அரசியல்தலைமைகள் மகிழ்ச்சியடைந்தனர், இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடையும் என எண்ணினார்கள்.
எனினும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் உள்ளிட்ட குழவினர் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்காவில் தற்சமயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பினை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது, இந்த நாட்டை சிறந்த பாதைக்கு இட்டுச்செல்வதே எமது நோக்கமாகும்.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாரிய ஆணையை எமக்கு வழங்கினார்கள், அதேபோல் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திலும் எமக்கு மீண்டும் மக்கள் ஆணை தேவைப்படுகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
